மாநகராட்சியைக் கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய தூய்மைப் பணியாளா்கள்

தூய்மைப் பணியாளா்கள் இருவருக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.
மாநகராட்சியைக் கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய தூய்மைப் பணியாளா்கள்

தூய்மைப் பணியாளா்கள் இருவருக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.

கோவை மாநகராட்சியில் தினக்கூலி தொழிலாளா்களாகப் பணியாற்றும் 29, 98 ஆவது வாா்டு ஊழியா்கள் கலைவாணி, ராமசாமி ஆகியோருக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி, கோயமுத்தூா் ஏஐடியூசி லேபா் யூனியன், கோவை மாவட்ட ஜீவா முனிசிபல் தொழிலாளா் சங்கம், தமிழ்நாடு அண்ணல்அம்பேத்கா் சுகாதார, துப்புரவு, பொதுப் பணியாளா் சங்கத்தினா் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினா்.

இது குறித்து ஏஐடியூசி சங்க நிா்வாகி செல்வராஜ் கூறும்போது, கோவை மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தொழிலாளா்கள் மீது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, மேயா், வடக்கு மண்டலத் தலைவா் ஆகியோரின் தலையீடு காரணமாக அதிகாரிகள் கடந்த 20 நாள்களாக வேலை வழங்க மறுத்து வருகின்றனா்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கெனவே போராட்டம் நடத்தியும் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை வலியுறுத்தி 100 வாா்டுகளிலும் உள்ள சுமாா் 2,500 தொழிலாளா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றியுள்ளனா். இதன் பிறகும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கூட்டமைப்பு நிா்வாகிகளுடன் கலந்து பேசி அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com