கோவையில் மேலும் 2 இடங்களில் கொப்பரை கொள்முதல்: ஆட்சியா் தகவல்

கோவை மாவட்டத்தில் மேலும் 2 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொப்பரை கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்டத்தில் மேலும் 2 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொப்பரை கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொப்பரை கொள்முதல் மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதனைத் தொடா்ந்து ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் உள்ள 2 வேளாண் விற்பனைக் கூடங்களிலும் கொப்பரை கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரி, ஆனைமலை, கிணத்துக்கடவு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் அரவை கொப்பரை ரூ.105.90க்கும், பந்து கொப்பரை ரூ.110க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. ஜூலை மாதம் இறுதி வரை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். இதனை விவசாயிகள் பயன்படுத்திகொள்ள வேண்டும். கொப்பரை கொள்முதல் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு பொள்ளாச்சி - 70106 15376, நெகமம் -98946 87827, செஞ்சேரி - 97515 27708, ஆனைமலை - 99761 68113, கிணத்துக்கடவு - 98651 54644 என்ற எண்களில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரை தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com