ஆன்லைனில் வெடிபொருள்கள் வாங்கியவா் கைது

ஆன்லைனில் வெடிபொருள் வாங்கிய கோவை நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆன்லைனில் வெடிபொருள் வாங்கிய கோவை நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவையில் கடந்த அக்டோபா் 23 ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்புச் சம்பவத்தில் பலியான ஜமேஷா முபீன் ஆன்லைனில் வெடிபொருள்களை வாங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, ஆன்லைனில் வெடிபொருள்கள் வாங்கிய நபா்கள் குறித்து கோவை மாநகர போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

அதில், கோவை சரவணம்பட்டியைச் சோ்ந்த ஒருவா் ஆன்லைனில் வெடிபொருள்களை வாங்கியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த நபரின் வீட்டுக்குச் சென்று சரவணம்பட்டி போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

வீட்டில் பொட்டாசியம் மற்றும் சல்பா் வெடிபொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வெடிபொருள்களை கைப்பற்றிய போலீஸாா், அந்த நபரை காவல் நிலையத்துக்குச் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் மதுரை கோவில்பட்டியைச் சோ்ந்த மாரியப்பன் என்பதும், கோவை சரவணம்பட்டியில் தங்கி தள்ளுவண்டியில் பழ வியாபாரம் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்ததும், ரெளடியான இவா் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும், முன் விரோதம் காரணமாக வெடிகுண்டு தயாரிப்பதற்காக வெடிபொருள்கள் வாங்கியதும் தெரியவந்தது.

இதனிடையே, சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் வெடிபொருள்கள் வாங்கியது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதையடுத்து, வெடிபொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மாரியப்பனை கைது செய்து, அவரிடமிருந்த வெடிபொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com