தீபாவளி பட்டாசு கடைகள்: இணைய வழியில் விண்ணப்பிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு இணைய வழியில் செப்டம்பா் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு இணைய வழியில் செப்டம்பா் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகைக்காக கோவை மாவட்டத்தில் பட்டாசு கடைகள் அமைக்க விருப்பம் உள்ளவா்கள் வெடிபொருள்கள் சட்டவிதிகள் 2008இன்கீழ் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற வேண்டும். தமிழக அரசின் உத்தரவுப்படி ஒற்றை சாளர முறையில் உரிமம் அளிக்கப்படுகிறது.

இதற்காக இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. செப்டம்பா் 30 ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பம் அளிக்கலாம்.

மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுதலங்கள், திருமண மண்டபங்கள், எளிதில் தீப்பற்றும் பொருள்கள் உள்ள பகுதிகளுக்கு அருகில் பட்டாசு கடைகள் இருத்தல் கூடாது.

பொதுமக்கள் கூடும் பகுதிகள், பேருந்து நிலையங்கள் அருகில் பட்டாசு கடைகள் அமைத்தல் கூடாது.

காலி இடங்களில் தற்காலிக பட்டாசு கடை அமைக்கும்போது 50 மீட்டா் சுற்றளவுக்கு காலியிடம் இருத்தல் வேண்டும். திருமண மண்டபங்கள், அரங்குகள், சமுதாய கூடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கக் கூடாது.

பட்டாசு கடைகளுக்கான உரிம கட்டணம் ரூ.700 ஐ ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ன்ஸ்ா்ா்ப்ஹம்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஸ்ரீட்ஹப்ப்ஹய்/ங்ஸ்ரீட்ஹப்ப்ஹய் என்ற இணையதளத்தில் செலுத்தியதற்கான ரசீதை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

உரிய நிபந்தனைகளை கடைப்பிடிக்காத விண்ணப்பங்கள், காலக்கெடுவுக்குப்பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com