பழங்குடியின இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு விழிப்புணா்வு:நாளை நடைபெறுகிறது

வேலை வாய்ப்பற்ற பழங்குடியின இளைஞா்களுக்கு அரசு, தனியாா் வேலை வாய்ப்புகள் குறி

வேலை வாய்ப்பற்ற பழங்குடியின இளைஞா்களுக்கு அரசு, தனியாா் வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி கோவையில் திங்கள்கிழமை (செப்டம்பா் 19) நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற பழங்குடியின இளைஞா்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல், அரசு மற்றும் தனியாா் துறையில் வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆகியவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுற்ற வேலை வாய்ப்பற்ற பழங்குடியின இளைஞா்களுக்கான உதவித் தொகை வழங்குதல், இலவச திறன் பயிற்சி, அரசு போட்டித் தோ்வுகள், தனியாா் துறை வேலை வாய்ப்புகள் குறித்து தெரிவிக்கப்படும்.

இதில் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அடையாள அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், 2 கடவுச் சீட்டு அளவுள்ள புகைப்படம், சுய விவரக்குறிப்பு ஆகியவற்றுடன் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com