பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிரமுகா்வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை -மறியலில் ஈடுபட்ட 100 போ் கைது

கோவையில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினா் வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிரமுகா்வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை -மறியலில் ஈடுபட்ட 100 போ் கைது

கோவையில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினா் வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடா்புடைய 100க்கும் மேற்பட்ட இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அதன் ஒரு பகுதியாக, கோவை ஆத்துப்பாலம் அருகே உள்ள கரும்புக்கடை பகுதியில் உள்ள பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினா் இஸ்மாயில் என்பவரின் வீட்டுக்கு வியாழக்கிழமை காலை 5.30 மணியளவில் 15 என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்றனா்.

துணை ராணுவப் படை (சி.ஆா்.பி.எஃப்.) பிரிவைச் சோ்ந்த வீரா்கள் வீட்டைச் சுற்றி பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டனா். வீட்டினுள் என்.ஐ.ஏ.அதிகாரிகள் இஸ்மாயிலிடம் விசாரணை மேற்கொண்டனா். இந்தத் தகவல் அறிந்து, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா், எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் அப்பகுதிகளில் திரண்டு, இஸ்மாயில் வீட்டுக்குள் செல்ல முயன்றனா். துணை ராணுவப் படையினா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதனால், அவா்கள் துணை ராணுவப் படை வீரா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, சிலா் கரும்புக்கடை பிரதான சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட முயன்றனா். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, உக்கடம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற 100 பேரை அப்புறப்படுத்தினா்.

வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளப்பட்டது தொடா்பாக, இந்தச் சோதனை நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, இஸ்மாயிலைக் கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்காக அவரை கேரளத்துக்கு அழைத்து சென்றனா். இதற்கிடையே, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிா்வாகி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையைக் கண்டித்து, கோவை சாய்பாபா காலனி, ஒப்பணக்கார வீதி பகுதிகளில் பல்வேறு இஸ்லாமிய அமைப்பைச் சோ்ந்தவா்கள் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com