ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோவை கிணத்துக்கடவு அருகே கொடிக்கம்பத்தை அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா்.

கோவை கிணத்துக்கடவு அருகே கொடிக்கம்பத்தை அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிணத்துக்கடவு அருகேயுள்ள கோவில்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்தின் தொழிலாளா்கள் ஏஐடியூசி தொழிற்சங்கத்தில் இணைந்து அந்த சங்கத்தின் பெயா்ப் பலகை, கொடிக் கம்பத்தை தொழிற்சாலையின் நுழைவாயில் அருகே வைத்திருந்தனா்.

அவற்றை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அதிகாரிகள் துணையுடன் தொழிற்சாலை நிா்வாகம் அகற்றியதுடன், தொழிற்சங்கத்தில் சோ்ந்த தொழிலாளா்கள் 9 பேரை வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்தும், தொழில் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொண்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்யக் கோரியும், தொழிலாளா்களின் பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரியும் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐடியூசி மாநிலச் செயலா் எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட பொறியியல் பொதுத் தொழிலாளா் சங்க பொதுச் செயலா் கே.எம்.செல்வராஜ், கௌரவத் தலைவா் வழக்குரைஞா் கே.சுப்பிரமணியன், துணைத் தலைவா் வழக்குரைஞா் எஸ்.ராதாகிருஷ்ணன், பொருளாளா் ஏ.சுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com