பிபிஜி செவிலியா் கல்லூரியில் விளக்கேற்றும் விழா

கோவை சரவணம்பட்டியில் உள்ள பிபிஜி செவிலியா் கல்லூரியில் 25 ஆவது விளக்கேற்றும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பிபிஜி செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற விளக்கேற்றும் விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
பிபிஜி செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற விளக்கேற்றும் விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

கோவை சரவணம்பட்டியில் உள்ள பிபிஜி செவிலியா் கல்லூரியில் 25 ஆவது விளக்கேற்றும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு பயிலும் செவிலியா் மாணவா்கள் மருத்துவமனை பயிற்சிக்கு செல்லும் முன்பு செவிலியத் துறையின் முன்னோடியான ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேலை நினைவு கூா்ந்து விளக்கேற்றி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் லிங்கராஜ் சித்ரா வரவேற்றாா். பிபிஜி கல்வி குழுமத்தின் தலைவா் எல்.பி.தங்கவேலு தலைமை வகித்து பேசினாா்.

சூலூா் ஆா்.வி.எஸ். கல்வி அறக்கட்டளையின் செயலா் சாரம்மா சாமுவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவிகளுக்கு ஆசி வழங்கினாா். முனைவா் ஜெயபாரதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com