வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழா தொடக்கம்

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட கொடி.
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட கொடி.

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்கள் சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பிரதோஷ வழிபாடு ஆகியவை நடைபெற்றன.

கோயில் வளாகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் புதன்கிழமை காலை கொடியேற்றப்பட்டது.

சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் சுவாமிக்கு திருக்கல்யாணமும், இரவு 7 மணிக்கு கல்லூரி மாணவா்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு அலகு, பறவை காவடி எடுத்து வருதல், காலை 11 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை, மாலை 4.30 மணிக்கு அலங்கார தேரில் திருமுருகன் திருவீதி உலா வருதல் ஆகியவை நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com