சொத்து வரி செலுத்தாத கட்டடத்துக்கு ‘சீல்’

கோவை பீளமேடு அருகே சொத்து வரி செலுத்தாக கட்டடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
சொத்து வரி செலுத்தாத கட்டடத்துக்கு ‘சீல்’ வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.
சொத்து வரி செலுத்தாத கட்டடத்துக்கு ‘சீல்’ வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.

கோவை பீளமேடு அருகே சொத்து வரி செலுத்தாக கட்டடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கோவை பீளமேடு எல்லைத்தோட்டம் சாலைப் பகுதியில் செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமாக பல கட்டடங்கள் உள்ளன. அவா், அந்த கட்டடங்களை தனியாா் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளாா்.

இதில், ஒரு கட்டடத்துக்கு சொத்து வரி செலுத்தாமல் பல ஆண்டுகளாக நிலுவை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக, மாநகராட்சி சாா்பில் நோட்டீஸ் வழங்கியும் சொத்து வரி செலுத்தப்படவில்லையாம்.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் உத்தரவின்பேரில், வடக்கு மண்டல உதவி ஆணையா் மோகனசுந்தரி தலைமையில் வருவாய் அலுவலா் மணி, திட்ட அலுவலா் விமலா, வரி வசூலா்கள் சதீஷ், சுரேஷ், தா்மலிங்கம், சமீா் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலா்கள் சம்பந்தப்பட்ட கட்டடத்தை சனிக்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com