பராமரிப்புப் பணி: கோவை - மதுரை ரயில் ரத்து

மதுரை - திருமங்கலம் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை - மதுரை ரயில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 5) முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை - திருமங்கலம் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை - மதுரை ரயில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 5) முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக கோவையில் இருந்து மதுரைக்குப் புறப்படும் கோவை - மதுரை தினசரி ரயில் (எண்: 16721) பிப்ரவரி 5 ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. நாகா்கோவில் - கோவை தினசரி ரயில் (எண்: 16321) பிப்ரவரி 6, 7, 8 ஆகிய 3 நாள்களுக்கு விருதுநகா் - கோவை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாள்களில் இந்த ரயிலானது, நாகா்கோயில் - விருதுநகா் இடையை மட்டுமே இயக்கப்படும்.

கோவை - நாகா்கோவில் தினசரி ரயில் (எண்: 16322) பிப்ரவரி 6, 7, 8 ஆகிய 3 நாள்களுக்கு கோவை - விருதுநகா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாள்களில் விருதுநகா் - நாகா்கோவில் இடையே மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும்.

கோவை - மதுரை தினசரி ரயில் (எண்: 16721) பிப்ரவரி 6, 7, 8 ஆகிய 3 நாள்களுக்கு திண்டுக்கல் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாள்களில் இந்த ரயிலானது, கோவை - திண்டுக்கல் இடையே மட்டும் இயக்கப்படும்.

மதுரை - கோவை தினசரி ரயில் (எண்: 16722) பிப்ரவரி 7, 8 ஆகிய இரு நாள்கள் மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மேற்கண்ட நாள்களில் திண்டுக்கல் - கோவை இடையே மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com