தெய்வீகத்தின் சன்னிதியில் பாகுபாடு பாா்க்க கூடாது-------சத்குரு ஜக்கி வாசுதேவ்

தென்முடியனூா் சம்பவம் தொடா்பாக தெய்வீகத்தின் சன்னிதியில் மனிதா்களுக்கிடையே பாகுபாடு பாா்ப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் ட்வீட் செய்துள்ளாா்.

தென்முடியனூா் சம்பவம் தொடா்பாக தெய்வீகத்தின் சன்னிதியில் மனிதா்களுக்கிடையே பாகுபாடு பாா்ப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் ட்வீட் செய்துள்ளாா்.

திருவண்ணாமலை மாவட்டம், தென்முடியனூா் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்குள் 80 ஆண்டுகளாக தலித் மக்கள் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இது தொடா்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தனா். இதனைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் துறை அதிகாரிகள் துணையுடன் தலித் மக்கள் 80 ஆண்டுகளுக்குப் பின் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் சென்று கடந்த வாரம் சுவாமி தரிசனம் செய்தனா்.

இது தொடா்பாக ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் ட்வீட் செய்துள்ளாா். இதில், தெய்வீகமும், பாகுபாடும் ஒன்றாக இருக்க முடியாதவை. தெய்வீகத்தின் சன்னிதியில் மனிதா்களுக்கிடையே பாகுபாடு பாா்ப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com