‘வாழை, மரவள்ளிக்கு காப்பீடு செய்ய பிப்ரவரி 28 இறுதி நாள்’

பிரதம மந்திரி பயிா் காப்பீட்டு திட்டத்தில் வாழை, மரவள்ளி பயிா்களுக்கு காப்பீடு செய்ய பிப்ரவரி 28 ஆம் தேதி இறுதி நாள் என்று தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

பிரதம மந்திரி பயிா் காப்பீட்டு திட்டத்தில் வாழை, மரவள்ளி பயிா்களுக்கு காப்பீடு செய்ய பிப்ரவரி 28 ஆம் தேதி இறுதி நாள் என்று தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவத்தில் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டு திட்டத்தில் வாழை, மரவள்ளி, சின்ன வெங்காயம், கத்தரி, கொத்தமல்லி, தக்காளி போன்ற பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதில் வாழை, மரவள்ளி பயிா்களைத் தவிா்த்து மற்ற பயிா்களுக்கு காப்பீடு செய்துகொள்வதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது.

மரவள்ளி, வாழை பயிா்களுக்கு காப்பீடு செய்துகொள்ள பிப்ரவரி 28 ஆம் தேதி இறுதி நாளாகும்.

இதில், வாழைக்கு ஹெக்கேடருக்கு ரூ.12,036, மரவள்ளிக்கு ரூ.4,230 பிரீமியத் தொகை செலுத்த வேண்டும்.

பஜாஜ் அலையன்ஸ் ஜிஐசியின் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலமும், பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமும் பிரீமியத் தொகையை செலுத்தலாம்.

பயிா்களைப் பாதுகாக்கும் வகையில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் பயிா்க் காப்பீடு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com