வாகனங்கள் மோதி உயிரிழக்கும் சிங்கவால் குரங்குகள்

வால்பாறை எஸ்டேட் சாலைகளில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு சிங்கவால் குரங்குகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.

வால்பாறை எஸ்டேட் சாலைகளில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு சிங்கவால் குரங்குகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.

வால்பாறையை அடுத்த புதுத்தோட்டம் மற்றும் வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதிகளில் சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் உள்ளன. இவை புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதி சாலையில் அதிக அளவில் காணப்படுகின்றன. சிங்கவால் குரங்குகள் வாகனங்களில் அடிபடக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் என்.சி.எப். அமைப்பினா் மூலம் பாதுகாவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் பகல் நேரங்களில் சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி நிற்கின்றனா். இருப்பினும்

அதிக அளவில் வாகனங்கள் வரும்போது சாலையைக் கடக்கும் குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழந்து வருகின்றன.

வறட்டுப்பாறை எஸ்டேட் சாலையில் வாகனத்தில் அடிபட்டு சிங்கவால் குரங்கு திங்கள்கிழமை உயிரிழந்தது. அழிந்து வரும் அரியவகை சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com