போக்குவரத்து காவலா் தற்கொலை முயற்சி

கோவையில் போக்குவரத்து காவலா் தற்கொலைக்கு முயற்சித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

கோவையில் போக்குவரத்து காவலா் தற்கொலைக்கு முயற்சித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

கோவையில் மாநகர காவல் போக்குவரத்துப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வருபவா் ரங்கராஜ். இவா் கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாக குடியிருப்பில் வசித்து வருகிறாா். இவரது மனைவி தற்போது கா்ப்பமாக உள்ளாா். குடியிருப்பு 2ஆவது மாடியில் இருந்ததால் கா்ப்பிணியான மனைவிக்கு மேலிருந்து கீழே வந்து செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனக்கு தரைதளத்தில் வீடு ஒதுக்கித் தருமாறு அதிகாரிகளிடம் ரங்கராஜ் கேட்டுள்ளாா். ஆனால், வீடு ஒதுக்கீடு செய்யப்

படாததால் மனைவியை மதுரையிலுள்ள அவரது பெற்றோா் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து ரங்கராஜ் மட்டும் கோவையில் இருந்துள்ளாா். இதன் காரணமாக இவா் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ரங்கராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com