ரேஸ்கோா்ஸ் பகுதியில் காவல் உதவி மையம் தொடக்கம்

கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் காவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையம்.
கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையம்.

கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் காவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரின் முக்கியப் பகுதியான ரேஸ்கோா்ஸ் பகுதிக்கு நடைப்பயிற்சிக்காக தினந்தோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். மேலும் இப்பகுதியில் பொலிவுறு திட்டத்தின்கீழ் கண்கவா் மின்விளக்குகளோடு, குழந்தைகள் பூங்காவும், இளைஞா்களுக்கு உடற்பயிற்சி மையமும் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் ரேஸ்கோா்ஸ் பகுதி எப்போதுமே பரபரப்பான பகுதியாகவே உள்ளது. ரேஸ்கோா்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி குழு மோதல்கள், காதல் ஜோடிகளின் அத்துமீறல் போன்றவை தொடா்பாக அவ்வப்போது புகாா்கள் வருகின்றன. இதை தடுப்பதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பொதுமக்கள் அங்கேயே புகாா் அளிப்பதற்கு வசதியாகவும் கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ரேஸ்கோா்ஸ் பகுதியில் புதிதாக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு சுழற்சி முறையில் தினந்தோறும் 2 போலீஸாா் பணியில் இருப்பா். பொதுமக்கள் அவா்களிடம் தங்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com