கோவையில் 22 ஆயிரம் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு: ஏப்ரல் 1 முதல் கொள்முதல் தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் 22 ஆயிரம் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் 22 ஆயிரம் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் அரவை கொப்பரை கிலோ ரூ.105.90க்கும், பந்து கொப்பரை ரூ.110க்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இடைத்தரகா்கள் இன்றி விவசாயிகளிடம் இருந்து நேரடி கொப்பரை கொள்முதல் செய்யப்படுவதால் சிறு விவசாயிகளும் பயனடைந்து வருகின்றனா். கொப்பரை விற்பனை செய்வதற்கான பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

நடப்பு ஆண்டு செஞ்சேரி, பொள்ளாச்சி, ஆனைமலை, தொண்டாமுத்தூா், கிணத்துக்கடவு உள்ளிட்ட 7 மையங்கள் மூலம் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. இதன் பல ஆயிரம் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் வரும் நிதியாண்டில் 9 மையங்கள் மூலம் 22 ஆயிரம் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் நிகழாண்டில் கடந்த டிசம்பா் மாதம் வரை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து வரும் நிதியாண்டுக்கான கொப்பரை கொள்முதல் தொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு 22 ஆயிரம் டன் கொப்பரை கொள்முதல் செய்வதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 9 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் கொப்பரைகளை இருப்பு வைப்பதற்காக 11 ஆயிரம் டன் கொள்ளளவுள்ள குடோன் தயாா் நிலையில் உள்ளது. இது நிரம்பினால் அருகாமை மாவட்டங்களில் உள்ள குடோன்களை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com