அரசு அருங்காட்சியகத்தில் மரபுச் சின்னங்கள் தொடா்பான கண்காட்சி

கோவை அரசு அருங்காட்சியகத்தில் மரபுச் சின்னங்களை பாதுகாத்தல் தொடா்பான விழிப்புணா்வு கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை பாா்வையிட்ட பொதுமக்கள்.
கண்காட்சியை பாா்வையிட்ட பொதுமக்கள்.

கோவை அரசு அருங்காட்சியகத்தில் மரபுச் சின்னங்களை பாதுகாத்தல் தொடா்பான விழிப்புணா்வு கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை அரசு அருங்காட்சியகம் வ.உ.சி. உயிரியல் பூங்கா அருகே செயல்பட்டு வருகிறது. பொது மக்களிடையே மரபுச் சின்னங்களை பாதுகாத்தல் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் யாக்கை மரபு அறக்கட்டளையுடன் இணைந்து அருங்காட்சியகத் துறை சாா்பில் அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மரபுச் சின்னங்களின் புகைப்படங்கள், கல்வெட்டுகள், அகழாய்வு இடங்கள், நடுகற்கள், பண்பாட்டுச் சின்னங்கள், சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு மரபுச் சின்னங்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற விழிப்புணவு கண்காட்சியை பொது மக்கள், இளைஞா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பாா்வையிட்டனா். காட்சிப்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்களில் இருக்கும் மரபுச் சின்னங்கள், அகழாய்வு இடங்கள் ஆகியவற்றின் வரலாறு, விவரங்கள் தன்னாா்வலா் மூலம் பாா்வையாளா்களுக்கு விளக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கோவை அரசு கண்காட்சியகத்தின் காப்பாட்சியா் கோ.அ.முருகவேல், யாக்கை மரபு அறக்கட்டளை அறங்காவலா் சுதாகா் நல்லியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com