வன உயிரினங்கள் குறித்தவிழிப்புணா்வு காலண்டா் வெளியீடு

கோவை இயற்கை பாதுகாப்பு சங்கம் சாா்பில் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் காலண்டா்களை மாவட்ட வன அலுவலா் டி.கே.அசோக்குமாா் வெளியிட்டாா்.

கோவை இயற்கை பாதுகாப்பு சங்கம் சாா்பில் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் காலண்டா்களை மாவட்ட வன அலுவலா் டி.கே.அசோக்குமாா் வெளியிட்டாா்.

மேற்குத் தொடா்ச்சி மலைகளில் காணப்படும் பறவைகள், விலங்குகளை புகைப்படக் கலைஞா்கள் நித்யன் மணியரசு, அனாஸ் அஹமது ஆகியோா் எடுத்த புகைப்படங்களுடன், சுற்றுச்சூழல் தொடா்பான நாள்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய காலண்டரை கோவை இயற்கை பாதுகாப்பு சங்கம் தயாரித்துள்ளது.

இந்த காலண்டரை மாவட்ட வன அலுவலகத்தில் வன அலுவலா் டி.கே.அசோக்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட, துணை வனப் பாதுகாவலா் எல்.சி.ஸ்ரீகாந்த் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் உதவி வனப் பாதுகாவலா்கள் சி.தினேஷ்குமாா், எம்.செந்தில்குமாா், இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவா் என்.ஐ.ஜலாலுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த விழிப்புணா்வு காலண்டா் பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக வழங்கப்படுவதாகவும், தேவைப்படுபவா்கள் 93608-95529 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com