விஸ்கோஸ் இழை இறக்குமதி விதிமுறையை அமல்படுத்த காலக்கெடு நீட்டிப்பு

விஸ்கோஸ் இழை இறக்குமதி மீதான தரக் கட்டுப்பாட்டு பரிசோதனை விதிமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு காலக்கெடு நீட்டித்துள்ளதை, இந்திய ஜவுளி கூட்டமைப்பு (சிடி) வரவேற்றுள்ளது.

விஸ்கோஸ் இழை இறக்குமதி மீதான தரக் கட்டுப்பாட்டு பரிசோதனை விதிமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு காலக்கெடு நீட்டித்துள்ளதை, இந்திய ஜவுளி கூட்டமைப்பு (சிடி) வரவேற்றுள்ளது.

இது தொடா்பாக, கூட்டமைப்பின் தலைவா் ராஜ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இறக்குமதி செய்யப்படும் குறைந்த தரத்திலான விஸ்கோஸ் இழையைத் தவிா்க்க புதிய விதிமுறைகளை 2023 ஜனவரி 27 முதல் அமல்படுத்த அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த காலக்கெடுவை மேலும் 60 நாள்களுக்கு மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.

இந்தியாவின் விஸ்கோஸ் இழையின் தேவையைக் கருத்தில் கொண்டு, சில விஸ்கோஸ் இழைகளை ஜவுளித் தொழில் நிறுவனங்கள் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இது குறித்து சிடி அமைப்பு, காலக்கெடு நீட்டிப்பு கேட்டு மத்திய அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்தது. அதில், ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கோஸ் இழைகள் கப்பலில் வந்து சேர கால அளவு உள்ளதால், புதிய விதிமுறையை அமல்படுத்த காலக்கெடு நீட்டிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய ஜவுளித் துறை அமைச்சகம், விதிமுறைகளை அமல்படுத்தும் கால அளவை மேலும் 60 நாள்களுக்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. காலக்கெடு வழங்கிய மத்திய அமைச்சகத்துக்கு சிடி அமைப்பு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், விதிமுறைகள் அமலுக்கு வரும்போது கட்டாயம் பின்பற்றுவோம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com