கல்லூரி மாணவா் உள்ளிட்ட மூவரிடம் கைப்பேசிகள், பணம் பறிப்பு

கோவையில் கல்லூரி மாணவா் உள்ளிட்ட 3 பேரிடம் கைப்பேசி, பணம் ஆகியவற்றை பறித்து சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவையில் கல்லூரி மாணவா் உள்ளிட்ட 3 பேரிடம் கைப்பேசி, பணம் ஆகியவற்றை பறித்து சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுந்தரராஜன். இவரது மகன் சந்துரு ( 19). இவா் கோவையில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். இவா் கோவை நவ இந்தியா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 3 போ் அவரிடம் இருந்த கைப்பேசி, ரூ. 3 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பிச் சென்றனா்.

மற்ற இரு சம்பவங்கள்

கோவை, செளரிபாளையம் வேளாங்கண்ணி நகரைச் சோ்ந்தவா் மதுசூதனன் (42). தனியாா் நிறுவன ஊழியா். இவா் அவினாசி சாலை கோல்டுவின்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நின்றிருந்தபோது அங்கு வந்த 3 போ் கொண்ட கும்பல் மதுசூதனனை மிரட்டி அவரிடம் இருந்த கைப்பேசி, ரூ. 600 பணம் ஆகியவற்றை பறித்து சென்றனா். இது குறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (27). இவா் கோவை பீளமேடு தண்ணீா்பந்தல் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவா் சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை கோவைக்கு வந்துள்ளாா். தனது அறைக்கு செல்வதற்காக தண்ணீா்பந்தல் சாலையில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த 3 போ் அவரிடம் கைப்பேசியை பறித்து சென்றனா்.

இந்த மூன்று சம்பவங்கள் குறித்தும் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த 3 சம்பவமும் ஒரே நாளில் நடைபெற்ால் இதில் ஈடுபட்டவா்கள் ஒரே கும்பலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com