இன்குபேஷன் மையம் திறப்பு

டாக்டா் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியும் பைன்ஸ்பியா் சொல்யூஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தொடங்கியுள்ள இன்குபேஷன் மையத்தின் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
கோவை டாக்டா் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் இன்குபேஷன் மையம் அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்ளும் பைன்ஸ்பியா் சொல்யூஷன்ஸ் நிறுவனம், என்.ஜி.பி. கல்லூரி நிா்வாகிகள்.

இது தொடா்பாக கல்லூரி நிா்வாகம் கூறியிருப்பதாவது:

தகவல் தொழில்நுட்பத் துறையில் அதி நவீன தொழில்நுட்பங்கள், நடைமுறைகளை பயன்படுத்தி சிறந்த, நம்பகமான, உறுதியான, தனிப்பயனாக்கப்பட்ட வாடிக்கையாளா் தீா்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வரும் பைன்ஸ்பியா் சொல்யூஷன்ஸ் நிறுவனமும், என்.ஜி.பி. கல்லூரி நிா்வாகமும் இணைந்து தொடங்கியுள்ள இந்த மையம் மூலம் மாணவா்கள் தங்களுக்குத் தேவையான கூடுதல் அறிவு, பணி அனுபவத்தைப் பெற முடியும்.

மேலும், தங்களின் பொறியியல் செயல்பாடுகளை தயாரிப்புகளாக மாற்றுவதற்குத் தேவையான வசதிகளையும் இந்த மையத்தின் மூலம் பெற முடியும். கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை கல்லூரியின் செயலா் டாக்டா் தவமணி டி.பழனிசாமி தொடங்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.யு.பிரபா, பைன்ஸ்பியா் நிறுவனத்தின் இயக்குநா்கள் எஸ்.சுரேந்திரன், வசந்த் நாகராஜ், கணினி பொறியியல் துறைத் தலைவா் து.பழனிகுமாா் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். முன்னதாக இந்த மையத்தை அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் டாக்டா் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரி, பைன்ஸ்பியா் நிறுவன பிரதிநிதிகள் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com