வேளாண்மைப் பல்கலைக்கழக நிறுவன நாள் விழா

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 53 ஆவது நிறுவன நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிறுவன நாள் விழாவில் பணியாளா்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறாா் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி. உடன், துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி, முன்னாள் த
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிறுவன நாள் விழாவில் பணியாளா்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறாா் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி. உடன், துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி, முன்னாள் த

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 53 ஆவது நிறுவன நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்ற விழாவில், பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது முதலான வரலாற்று நிகழ்வுகளை துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி நினைவுகூா்ந்தாா். மேலும், பல்கலைக்கழகம் இதுவரை கண்டறிந்துள்ள புதிய பயிா் ரகங்கள், காப்புரிமைகள், முன்னாள் மாணவா்கள் குறித்து விளக்கினாா்.

முன்னாள் துணைவேந்தா் கு.ராமசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசும்போது, பல்கலைக்கழகத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து பாராட்டு தெரிவித்தாா். மேலும், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் தற்போதைய திட்டங்கள், கொள்கைகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முன்னோடி கல்வி நிறுவனமாக இருந்துள்ளது என்றாா்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, பல்கலைக்கழக அளவிலான சிறந்த ஆராய்ச்சியாளா்கள், வேளாண் விரிவாக்க அலுவலா்கள், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள், பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 105 பணியாளா்கள், 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 2 ஓட்டுநா்கள், 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒரு ஓட்டுநா் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கிப் பாராட்டினாா்.

விழாவில் துறை முதன்மையா்கள், பேராசிரியா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com