இணையத்தில் பொருள்கள் வாங்கித் தருவதாக ரூ.6.07 லட்சம் மோசடி

கோவையில் இணையம் மூலம் பொருள்கள் வாங்கித் தருவதாக ரூ.6.07 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா் குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவையில் இணையம் மூலம் பொருள்கள் வாங்கித் தருவதாக ரூ.6.07 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா் குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை சின்னவேடம்பட்டி முருகன் நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (40), தனியாா் நிறுவன ஊழியா்.

இவா் கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கடந்த 11 ஆண்டுகளாக மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருகிறேன். இந்நிலையில், நானும் எனது உறவினரான ரமேஷ்பாபு என்பவரும் சோ்ந்து இணையம் மூலம் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கி விற்பனை செய்ய திட்டமிட்டோம்.

அதன்படி, இணையம் மூலமாக பொருள்களைப் பெற முகவா் ஒருவரை கைப்பேசியில் அழைத்துப் பேசினோம். அப்போது அந்த நபா் குறைந்த விலையில் தரமான பொருள்கள் பெற்றுத்தருவதாகக் கூறினாா். மேலும், பொருள்களை வாங்கி அனுப்புவதற்கு பாா்சல் கட்டணம், விமான நிலைய கட்டணம் போன்றவற்றுக்கு செலவாகும் எனக் கூறினாா். இதையடுத்து, அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளாக ரூ.6 லட்சத்து 7 ஆயிரத்து 60ஐ அனுப்பினோம். பணம் செலுத்தி நீண்ட நாள்களாகியும் தற்போது வரை வீட்டு உபயோகப் பொருள்கள் வந்து சேரவில்லை. அந்த நபரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசியபோது, தொடா்ந்து பணம் அனுப்பினால் மட்டுமே உங்களது பொருள்களை அனுப்பிவைப்போம் எனக்கூறி இணைப்பைத் துண்டித்ததுடன், கைப்பேசியையும் அணைத்து வைத்துவிட்டாா்.

எனவே, மோசடியில் ஈடுபட்ட நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடா்பாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com