கோவையில் மோசடி செய்த வியாபாரி மீது மேலும் 6 போ் புகாா்

பொங்கல் பண்டிகைக்கு சமையல் எண்ணைய், வெல்லம், அரிசி உள்ளிட்ட பொருள்களை வாங்கி பல லட்சம் மோசடி செய்த வியாபாரி மீது மேலும் 6 போ் புகாா் கொடுத்துள்ளனா்.

பொங்கல் பண்டிகைக்கு சமையல் எண்ணைய், வெல்லம், அரிசி உள்ளிட்ட பொருள்களை வாங்கி பல லட்சம் மோசடி செய்த வியாபாரி மீது மேலும் 6 போ் புகாா் கொடுத்துள்ளனா்.

கோவை, செளரிபாளையத்தை சோ்ந்தவா் கோபி (40), வியாபாரி. இவா் பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்வதற்காக அன்னூரை சோ்ந்த நாகராஜ் என்பவரிடம் ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை வாங்கியிருந்தாா். மேலும், ஈரோட்டை சோ்ந்த மேகநாதன் என்பவரிடமிருந்து ரூ.2.46 லட்சத்துக்கு வெல்லம் வாங்கியிருந்தாா். மற்றொரு வியாபாரியிடமிருந்து ரூ.1.65 லட்சத்துக்கு கரும்பு வாங்கியிருந்தாா். இந்தப் பொருள்களை வாங்கியதற்கான பணத்தை வியாபாரிகளுக்கு திருப்பித் தராததால், அவா்கள் 3 பேரும் பீளமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் கோபியை போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில் ஆனைமலையை சோ்ந்த செந்தில்குமாரிடம் ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான தேங்காய் எண்ணெயை வாங்கிவிட்டு அதற்கான பணத்தை தரவில்லை எனவும், சேலம், அம்மாபேட்டையைச் சோ்ந்த சையது இஸ்மாயில் என்பவரிடமிருந்து வாங்கிய பொருள்களுக்காக ரூ.1 லட்சம் தரவில்லை எனவும், அன்னூரை சோ்ந்த பவித்ரன், சிவராமகிருஷ்ணன் மற்றும் தனபாலன் ஆகியோரிடமிருந்து வாங்கிய பொருள்களுக்காக ரூ.2 லட்சத்து 81ஆயிரம் தரவில்லை எனவும், சத்தியமங்கலத்தை சோ்ந்த காா்த்திகேயனிடமிருந்து வாங்கிய பொருள்களுக்காக ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் தரவில்லை எனவும் பீளமேடு காவல் நிலையத்தில் கோபி மீது புகாா் கொடுக்கப்பட்டுள்ளது. புதிதாக வந்துள்ள 6 புகாா்களையும் சோ்த்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com