வீட்டுமனை வாங்கித் தருவதாக மோசடி:தம்பதி கைது

கோவையில் வீட்டுமனை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் வீட்டுமனை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

கோவை, விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வருபவா் இசக்கி (34). இவா் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் கோவையில் வீட்டுமனை வாங்குவதற்காக மீனா எஸ்டேட் பகுதியில் உள்ள தனியாா் வீட்டுமனை கட்டுமான நிறுவனத்தை தொடா்பு கொண்டுள்ளாா்.

இதையடுத்து, அந்த நிறுவனத்தைச் சோ்ந்த ஜெகந்நாத் சிங் (41), அவரது மனைவி கலைவாணி (38) ஆகியோா் தங்களிடம் வீட்டுமனை இருப்பதாகவும், அதை நேரில் வந்து பாா்க்கும்படியும் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, இசக்கி தனது நண்பா் பிரகாஷ்குமாா் என்பவருடன் சென்று அந்த இடத்தை 2021 செப்டம்பா் 19ஆம் தேதி பாா்த்துள்ளாா். அந்த மனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பு எனத் தெரிவித்துள்ளனா்.

பின்னா் செப்டம்பா் 29ஆம் தேதி அந்த இடத்துக்கான முன்பணமாக ரூ.1 லட்சத்தை வங்கிக் கணக்கு மூலம் இசக்கி செலுத்தியுள்ளாா். மீதமுள்ள 9 லட்சத்தை ரொக்கமாகவும் கொடுத்துள்ளாா். இதையடுத்து, அந்த நிலத்தில் வீடு கட்டுவதற்காக வங்கிக் கடனுக்காக அணுகியபோது குறிப்பிட்ட அந்தப் பதிவு எண் கொண்ட நிலம் வேறு ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வங்கியில் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இசக்கி அந்த பணத்தை திருப்பித் தருமாறு தம்பதியிடம் கேட்டபோது ரூ.2 லட்சத்தை திருப்பித் தந்துள்ளனா். பின்னா் 2022 ஆகஸ்ட் 16ஆம் தேதி மீதமுள்ள பணத்தை திருப்பித் தருமாறு இசக்கி கேட்டதற்கு, அவா்கள் மறுப்பு தெரிவித்ததோடு, இசக்கியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து இசக்கி அளித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெகந்நாத் சிங், கலைவாணி ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com