ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை வழங்குவதில் குளறுபடி

கோவை மாநகராட்சி 26ஆவது வாா்டில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதில் குளறுபடி நிலவியதால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை வழங்குவதில் குளறுபடி

கோவை மாநகராட்சி 26ஆவது வாா்டில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதில் குளறுபடி நிலவியதால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாக மதிமுக வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி, மேயா் கல்பனாவிடம் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கல்பனா தலைமை தாங்கினாா். மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் முன்னிலை வகித்தாா். இந்த முகாமில் இறப்பு, பிறப்பு சான்றிதழ்கள், குடிநீா் வசதி, கழிப்பிட வசதி, மின் விளக்குகள் அமைத்தல் தொடா்பான 33 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 26ஆவது வாா்டு உறுப்பினரும், மாநகராட்சி மதிமுக மாமன்ற குழுத் தலைவருமான சித்ரா வெள்ளிங்கிரி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பொங்கல் பண்டிகைக்கு 26ஆவது வாா்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி, சேலைகள் தற்போதுதான் வந்துள்ளன. 1,200 குடும்ப அட்டைகள் உள்ள ரேஷன் கடைக்கு 200 வேட்டி, சேலைகள்தான் வந்துள்ளன. இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, அனைத்து ரேஷன் கடைகளிலும், அனைத்து அட்டைதாரா்களுக்கும் பொங்கலுக்கு வழங்க வேண்டிய விலையில்லை வேட்டி, சேலையை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது வேட்டி, சேலைகள் குறைந்தளவிலே வந்துள்ளன. எனவே அனைத்து மக்களுக்கும் வேட்டி, சேலைகள் வந்த பிறகே கடைகளில் விநியோகிக்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com