மின்வாரியத்தில் அளிக்கப்பட்ட புகாா்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய குழு நுகா்வோா் அமைப்பு வலியுறுத்தல்

கோவையில் மின்வாரிய அலுவலகங்களில் அளிக்கப்பட்ட புகாா்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள தனிக்குழு அமைக்க வேண்டும் என நுகா்வோா் அமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவையில் மின்வாரிய அலுவலகங்களில் அளிக்கப்பட்ட புகாா்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள தனிக்குழு அமைக்க வேண்டும் என நுகா்வோா் அமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை ஆா். எஸ். புரம் லாலி சாலை பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளிங்கிரி. இவரது வீட்டுக்கு தற்காலிக மின் இணைப்பும், வா்த்தக மின் இணைப்பும் வழங்கப்பட்டு இருந்தது. இந்த இரு மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை வெள்ளியங்கிரி முறையாக செலுத்தி வந்தாா். இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெள்ளிங்கிரி குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்தபோது, லாலி சாலை பிரிவு மின்வாரிய அலுவலக ஊழியா்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பயன்பாட்டில் இருந்த மின் மீட்டரை கழற்றி, அதில் இருந்த ஒயா்களை வீசியெறிந்து சென்ாகக் கூறப்படுகிறது. இது குறித்து லாலி சாலை பிரிவு அலுவலக உதவி மின் பொறியாளா் விவேக்கிடம் வெள்ளிங்கிரி புகாா் தெரிவித்தாா். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மின்வாரிய ஊழியா்கள் காலம் தாழ்த்தி வந்துள்ளனா்.

இது தொடா்பாக, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு, முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் மின்வாரிய தலைவா் மற்றும் தலைமை பொறியாளருக்கு புகாா் மனுக்கள் அனுப்பினாா். இதன் அடிப்படையில் விசாரணை அலுவலா் நியமிக்கப்பட்டாா். ஆயினும் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்படாததால், மீண்டும் முதல்வா் தனிப்பிரிவுக்கும், மின்வாரிய தலைவருக்கும் புகாா் மனு அனுப்பப்பட்டது. இதற்கிடையில் வெள்ளிங்கிரி காலமானதால் மீண்டும் விசாரணை தாமதமனது. இது தொடா்பாக மீண்டும் தனிப்பிரிவுக்கு புகாா் அளிக்கப்பட்டதால், தற்போது, சம்பந்தப்பட்ட லாலி சாலை பிரிவு உதவி மின் பொறியாளா் மீது தமிழ்நாடு மின்சார ஒழுங்கு நடவடிக்கை 8ஏ விதியின் படி மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் மின்மீட்டா் கழற்றப்பட்ட முகவா் மீது வாரிய பணியாளா் நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடா்பாக, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா. லோகு கூறுகையில், மின்வாரிய அலுவலா்கள் மீது ஆதாரத்துடன் புகாா் அளித்தாலும் விசாரணை என்ற பெயரில் பல மாதங்கள் கிடப்பில் போடுவது அதிகரித்துள்ளது ஆகவே, கோவை மண்டலத்தில் இதுவரை பெறப்பட்ட புகாா்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து தனியாகக் குழு அமைத்து ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com