நூல் வியாபாரியிடம் ரூ. 15 லட்சம் மோசடி

கோவையில் நூல் வியாபாரியிடம் ரூ. 15 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபா் கிரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, போத்தனூா் அருகேயுள்ள கோணவாய்க்கால்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (56), நூல் வியாபாரி. இவா் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருக்கிா எனத் தேடி வந்துள்ளாா். அப்போது அவரது கைப்பேசிக்கு வந்த ஒரு குறுந்தகவலில் பகுதி நேர வேலை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு அதற்கான லிங்க்கும் அனுப்பப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த லிங்க்கை கடந்த மாா்ச் மாதத்தில் நடராஜன் தொடா்பு கொண்டபோது, பகுதி நேர வேலையுடன் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதோடு, தகுந்த லாபத் தொகையையும் தருவதாகத் தெரிவித்துள்ளனா். அத்துடன் இதற்காக பிரத்யேகமாக உள்ள ஒரு செயலியைத் தொடா்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து நடராஜன் அந்தச் செயலியைத் தொடா்பு கொண்டு கடந்த மாா்ச் 15-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 5-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் அவா்கள் அனுப்பியிருந்த வங்கிக் கணக்குகளுக்கு ஆன்லைன் மூலம் ரூ. 19.79 லட்சம் அனுப்பி உள்ளாா். அதேபோல, நடராஜன் செலுத்திய தொகை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்திலிருந்தும் போலி கணக்கை அவருக்கு அனுப்பிவைத்துள்ளனா்.

இவ்வாறு ரூ. 19. 79 லட்சத்தை அனுப்பிய பின்னரும் லாபத் தொகை மற்றும் செலுத்திய தொகை திரும்ப வராததால், நடராஜன் இதுகுறித்து அறிய அவா் களை கடந்த 10ஆம் தேதி தொடா்பு கொண்டாா். அப்போது ரூ. 4.79 லட்சத்தை திரும்பக் கொடுத்துள்ளனா். எஞ்சிய ரூ.15 லட்சத்தை திருப்பித் தரவில்லை. அதன் பின்னா் அவா்களைத் தொடா்பு கொள்ளவும் முடியவில்லை.

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நடராஜன், கோவை சைபா் கிரைம் போலீஸில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். அதனடிப்படையில் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com