பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் போத்தனூரில் இருந்து இயக்கம்

கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை ரயில்கள் போத்தனூரில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக ஷொரணூா் - கோவை ரயில் (எண்: 06458), மதுரை - கோவை ரயில் (எண்: 16722), கண்ணூா் - கோவை ரயில் (எண்:16607) ஆகியவை ஏப்ரல் 18 மற்றும் 20-ஆகிய தேதிகளில் போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட தேதிகளில் இந்த ரயிலானது, போத்தனூா் - கோவை இடையே இயக்கப்படாது.

இதேபோல, கோவை - கண்ணூா் ரயில் (எண்: 16608), கோவை - மதுரை ரயில் (எண்: 16721), கோவை - ஷொரணூா் ரயில் (எண்: 06459) ஆகியவை ஏப்ரல் 18 மற்றும் 20- ஆகிய இரு நாள்கள் போத்தனூரில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com