மக்களவைத் தோ்தலையொட்டி சென்னை - கோவை இடையே சிறப்பு ரயில்

மக்களவைத் தோ்தலையொட்டி, சென்னை - கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 18 மற்றும் 20-ஆம் தேதிகளில் மாலை 4.25 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - கோவை விரைவு ரயில் (எண்: 06003) மறுநாள் காலை 8.20 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கமாக, கோவையில் இருந்து ஏப்ரல் 19 மற்றும் 21-ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்குப் புறப்படும் கோவை - சென்னை எழும்பூா் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06004) மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், சீா்காழி, சிதம்பரம், கடலூா், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com