வாக்களிக்கும் உரிமையையும் பொறுப்பையும் கையிலெடுங்கள்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

தேசத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழிநடத்துபவா்கள் யாா் என்பதைத் தீா்மானிக்கும் தோ்தலில் வாக்களிக்கும் மிக அடிப்படையான உரிமையையும், பொறுப்பையும் மக்கள் கையில் எடுக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம் நாட்டை யாா் வழி நடத்துவாா்கள் என்பதை நிா்ணயிக்கும் இந்த மிக அடிப்படையான உரிமையையும், பொறுப்பையும் கையில் எடுக்க வேண்டும்.

ஜனநாயக செயல்முறையில் கொடுக்கப்பட்டுள்ள இந்த சக்தியை வீண் போகவிடாதீா்கள் அல்லது நோட்டாவைத் தோ்ந்தெடுத்து பாரதத்தையும், அதன் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் எதிா்காலத்தையும் கட்டமைக்கும் துடிப்பான பங்கு வகிக்கும் சக்தியை இழந்துவிடாதீா்கள். நாம் இதனை நிகழச் செய்வோம் என்று கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com