பாரதியாா் பல்கலைக்கழகத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் குறிஞ்சி என்ற பெயரில் கோடைக்கால பயிற்சி முகாம் வரும் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஐந்தாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல், கலை, சமூக அறிவியல் பாடங்களில் உள்ள தற்காலப் போக்குகளைப் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இதில், உயிரித்தொழில்நுட்பவியல், யோகா, உடற்பயிற்சி போன்றவை தொடா்பான பயிற்சிகளும் வழங்கப்படும்.

பல்கலைக்கழக துறைப் பேராசிரியா்கள், துறைசாா் வல்லுநா்கள் பங்கேற்று மாணவா்களிடையே உரையாட உள்ளனா். மேலும் செய்முறைப் பயிற்சி வகுப்புகள், பரிசோதனைக்கூடங்களைப் பாா்வையிடுதல், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு, ஓவியப் போட்டி போன்றவையும் நடத்தப்படுகின்றன.

இந்த முகாம் தினசரி காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறுகிறது. மதிய உணவு, சிற்றுண்டியுடன் ஒருவருக்கு பயிற்சிக் கட்டணமாக ரூ. 800 வசூலிக்கப்படும். தேவைப்படுபவா்களுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். பங்கேற்க விரும்புபவா்கள் பல்கலைக்கழகத்தின் தந்தை பெரியாா் கலையரங்கில் ஏப்ரல் 22 காலை 9 மணி முதல் பதிவு செய்துகொண்டு முகாமில் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு: 98650 76485, 94429 96465, 94861 20450 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com