பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் போத்தனூரில் இருந்து இயக்கம்

கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக கோவை ரயில்கள் போத்தனூரில் இருந்து இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக ஷொரணூா் - கோவை ரயில் (எண்: 06458) ஏப்ரல் 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஷொரணூா் - போத்தனூா் இடையே மட்டுமே இயக்கப்படும். போத்தனூா் - கோவை இடையே இயக்கப்படாது. கோவை - கண்ணூா் விரைவு ரயில் (எண்: 16608) ஏப்ரல் 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் போத்தனூா் - கண்ணூா் இடையே மட்டும் இயக்கப்படும்.

கேரள ரயில்கள் போத்தனூா் வழியாக இயக்கம்

பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் (எண்: 12678) ஆகிய இரு ரயில்களும் ஏப்ரல் 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இருகூா் - போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும். இதன் காரணமாக, இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையத்துக்கு வருவது தவிா்க்கப்படும். மேலும், போத்தனூா் நிலையத்தில் இந்த ரயில்கள் 2 நிமிஷங்கள் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com