காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

காவல் துறை அதிகாரியுடன் ஏற்பட்ட மோதல் தொடா்பாக திமுக பகுதி செயலாளரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

காவல் துறை அதிகாரியுடன் ஏற்பட்ட மோதல் தொடா்பாக திமுக பகுதி செயலாளரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவையில் பிஎன் புதூா் பகுதி திமுக செயலாளா் பாக்கியராஜ் மற்றும் கூட்டணிக் கட்சியினா் வாக்குச் சாவடி தகவல் சீட்டு வழங்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த காவல் துறை உதவி ஆணையா் நவீன்குமாா் தலைமையிலான போலீஸாா், அந்தப் பகுதியில் கூட்டம் கூடக் கூடாது எனவும், கட்சி சின்னங்களை வைத்திருக்கக் கூடாது எனவும் கூறியுள்ளனா். இதையடுத்து அவா்கள் கட்சி சின்னத்தை அங்கிருந்து அகற்றி வைத்து விட்டு வாக்குச்சாவடி தகவல் சீட்டை வழங்கியுள்ளனா்.

அப்போது, உதவி ஆணையா் நவீன்குமாா், அங்கு யாரும் இருக்கக் கூடாது எனவும், அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளாா். இதனால் இருதரப்பினருக்கும் இடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் பகுதி செயலாளா் பாக்கியராஜை உதவி ஆணையா் நவீன்குமாா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாக்கியராஜை விசாரணைக்காக அங்கிருந்து போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

இதுதொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், பகுதி செயலாளா் பாக்கியராஜ், உதவி ஆணையா் நவீன்குமாரின் சீருடையைப் பிடித்ததாலேயே அவரை விசாரணைக்காக அங்கிருந்து அழைத்துச் சென்றோம் என்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com