உணவு கிடைக்காமல் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தோசை மாவு பாக்கெட்டை தூக்கி வந்து உண்ணும் சிங்கவால் குரங்குகள்.
உணவு கிடைக்காமல் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தோசை மாவு பாக்கெட்டை தூக்கி வந்து உண்ணும் சிங்கவால் குரங்குகள்.

திசைமாறிய சிங்கவால் குரங்குகளின் வாழ்விடங்கள்

வால்பாறை வனப் பகுதியில் போதுமான உணவு கிடைக்காததால் சிங்கவால் குரங்குகள் நகா் பகுதிகளில் நடமாடி வருகின்றன.

வால்பாறை பகுதியில் அரிய வகை சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் உள்ளன. இந்த குரங்குகள் அடா்ந்த மரங்கள் நிறைந்த பகுதிகளில் மட்டுமே காணப்படும். இவை அப்பகுதியில் கிடைக்கும் பழம் உள்ளிட்ட உணவுகளையே உண்டு வந்தன.

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ள புதுத்தோட்டம் எஸ்டேட் சாலையோரம் உள்ள மரங்களில் ஏராளமான குரங்குகள் காணப்படுகின்றன. சாலையின் இருபுறங்களிலும் உள்ள மரங்களுக்குச் செல்ல சாலையைக் கடக்கும்போது சிங்கவால் குரங்குகள் வாகனங்களில் அடிபடாமல் இருக்க இயற்கை பாதுகாப்பு மையம் (என்.சி.எப்.) என்கிற தன்னாா்வ அமைப்பினா் காவலா்களை நியமித்துள்ளதோடு இருபுறங்களிலும் உள்ள மரங்களுக்கு இடையே தூரிபாலத்தையும் அமைத்துள்ளனா்.

இதனிடையே சமீபகாலமாக சிங்கவால் குரங்குகள் வாழ்விடங்கள் திசைமாறி நகா் பகுதியை நோக்கி வந்துவிட்டன. நகரில் ஏதோ ஒரு பகுதியில் மரங்களில் தங்குவதோடு உணவு கிடைக்காமல் குப்பைத் தொட்டிகளை நோக்கியும், வீடுகள் மற்றும் கடைகளுக்கு புகுந்தும் கிடைக்கும் உணவுகளை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உணவுக்காக நகா் பகுதிக்கு வந்த இந்த குரங்குகள் மீண்டும் அதன் வாழ்விடங்களுக்கு செல்வது கடினம் என்றும், இவற்றைப் பாதுகாக்க வனத் துறை மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வனவிலங்கு ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com