வெப்ப அலை: வெளியில் செல்வதைத் தவிா்க்குமாறு ஆட்சியா் வேண்டுகோள்

கோவையில் வெப்ப அலை வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துக் காணப்படுகிறது. கோவை மாவட்டத்தில் வரும் நாள்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் போதுமான அளவுக்கு நீா் அருந்துவதுடன், அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com