நீா்மோா் பந்தலைத் தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்குகிறாா் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்.
நீா்மோா் பந்தலைத் தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்குகிறாா் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்.

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

மாநகராட்சியில் 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நீா்மோா் பந்தலை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவையில் அதிகரித்து வரும் வெயிலுக்கு இதமாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் மண்டலத்துக்கு 10 வீதம் 5 மண்டலங்களிலும் சோ்த்து 50 இடங்களில் தண்ணீா், நீா்மோா் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி 10-ஆவது வாா்டுக்குள்பட்ட சரவணம்பட்டி பிரதான சாலை சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீா்மோா் பந்தலை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

முன்னதாக, வடக்கு மண்டலத்துக்குள்பட்ட 4-ஆவது வாா்டு சரவணம்பட்டி வண்ணான்குட்டை சாலை, 10-ஆவது வாா்டுக்குள்பட்ட அம்மன் நகா் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய தாா் சாலைகளை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, 25-ஆவது வாா்டு காந்திமாநகா் பகுதியில் புதைசாக்கடை திட்டத்தில் உந்துநிலையம் (பம்பிங் ஸ்டேஷன்) அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது மாநகரத் தலைமை பொறியாளா் அன்பழகன், செயற்பொறியாளா் முருகேசன், உதவி ஆணையா் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளா் எழில், உதவி பொறியாளா் சக்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com