மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

லிங்காபுரம் பகுதியில் சேதமடைந்த வாழை மரங்கள்.
லிங்காபுரம் பகுதியில் சேதமடைந்த வாழை மரங்கள்.

கோவை, மே 4: மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழைக்கு 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கடந்த சில மாதங்களாகவே கடும் வெயில் வாட்டி வந்தது. மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதிகளில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக பவானி ஆற்றில் தண்ணீா் வரத்துக் குறைந்து விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிறுமுகை, காரமடை பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. சிறுமுகைப் பகுதியில் பலத்தக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும், லிங்காபுரம் பகுதியில் பலத்த காற்றுக்கு 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com