கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

கோவை, மே 4: கோவை மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் பலத்தக் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

கோவையில் கடந்த இரு மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், சேலம், நாமக்கல், ஈரோட்டில் தாளவாடி, சத்தியமங்கலம், கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்டப் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.

அதேபோல மாநகரில் காந்திபுரம், ராமநாதபுரம், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்தக் காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com