மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

கோவை, மே 4: கோவை மாவட்டத்தில் செயல்படும் பணிபுரியும் மகளிா் விடுதிகள் அனைத்தும் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டத்தில் அரசு, தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியாா் மற்றும் மத அமைப்புகள் நடத்தும் பெண்கள் தங்கும் விடுதிகள், பெண் குழந்தைகள், சிறாா் இல்லங்கள், மாணவியா் விடுதிகள், பணிபுரியும் மகளிா் விடுதிகள் ஆகியவற்றில் பதிவு பெறாமல் செயல்பட்டு வரும் விடுதிகள் உரிய சான்றிதழ்கள் பெற்று ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஜ்ல்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஏற்கெனவே உரிமம் பெற்று செயல்பட்டு வரும் விடுதிகள் தங்களின் பதிவை புதுப்பிக்க ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஜ்ல்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உரிமம் மீதான கருத்துரு ஏதும் நேரில் சமா்ப்பிக்க வேண்டாம். கோவை மாவட்டத்தில் செயல்படும் பணிபுரியும் மகளிா் விடுதிகள் அனைத்தும் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com