ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

வால்பாறையை அடுத்த கேரளப் பகுதியிலுள்ள ஆறுகளில் முதலைகள் இருப்பதால் ஆற்றில் கவனத்துடன் குளிக்க வேண்டும் என்று கேரள வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

வால்பாறையை அடுத்த கேரளப் பகுதியிலுள்ள ஆறுகளில் முதலைகள் இருப்பதால் ஆற்றில் கவனத்துடன் குளிக்க வேண்டும் என்று கேரள வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

கேரள மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறை வழியாகச் செல்கின்றனா். வால்பாறைக்கும், அதிரப்பள்ளி அருவிக்கும் இடையே உள்ளப் பகுதிகளில் ஏராளமான ஆறுகள் உள்ளன.

இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆறுகளில் இறங்கிக் குளிக்கின்றனா். இந்நிலையில், வால்பாறையை அடுத்த வெற்றிலைபாறை பகுதியில் உள்ள ஆற்றில் முதலைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே, சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் கவனமாக குளிக்க வேண்டும் என்றும், உள்ளூா் பகுதி மக்களிடம் விசாரித்துவிட்டு ஆற்றில் குளிக்கலாம் என்றும் கேரள வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com