வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாா்டு.
வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாா்டு.

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோவை, மே 5: கோவை அரசு மருத்துவமனையில் வெப்பத்தால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வாா்டு ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த பிப்ரவரியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. இதைத் தொடா்ந்து கத்தரி வெயில் சனிக்கிழமை தொடங்கியது.

இந்நிலையில் வெப்பப் பாதிப்பால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குளிா்சாதன வசதியுடன் சிறப்பு வாா்டு தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவா்கள் கூறியதாவது:

வெயிலின் தாக்கத்தால் உடலில் நீா்ச்சத்து குறைந்து வயிறு வலி, கால்களில் நரம்பு பிடிப்பு, தோல் சிவத்தல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள உடலில் நீா்ச்சத்து குறையாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

வெப்பத்தால் ஏற்படும் ஒவ்வொமை, பக்கவாத பாதிப்புகளுக்கு உடனடியாக உடல் வெப்பத்தைக் குறைக்கும் முதலுதவி சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவா்களின் கழுத்து, முழங்கால் மடிப்பு ஆகியப் பகுதிகளில் ஐஸ்கட்டிகளைக்கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும். உடலுக்கு நீா்ச்சத்து கிடைக்க குளுகோஸ், உப்புக் கரைசல் நீரைப் பருக வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com