மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

கோவை மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவையில் சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்படுவைத் தவிா்க்கும் விதமாக, 10 இடங்களில் தற்காலிகத் துணிப் பந்தல் அமைக்கப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி கவுண்டம்பாளையம், டவுன்ஹால், சிங்காநல்லூரில் திருச்சி சாலை ஆகிய இடங்களில் தற்காலிகப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் செல்வபுரம், சுந்தராபுரம், குட்ஷெட் சாலை, சத்தி சாலை, சரவணம்பட்டி, ராமகிருஷ்ணாபுரம்,

ஹோப் காலேஜ் ஆகிய 7 இடங்களில் தற்காலிகப் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com