மான் இறைச்சியை எடுத்துச்செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டவா்கள்.
மான் இறைச்சியை எடுத்துச்செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டவா்கள்.

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 பேரை வனத் துறையினா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கோவை: மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 பேரை வனத் துறையினா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம், நந்தவனம் பவானி ஆற்றங்கரையில் மான் இறைச்சி எடுத்துச்செல்வதாக வனத் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்து. வனச் சரக அலுவலா் ஸ்டாலின் தலைமையிலான குழுவினா் அங்கு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, பவானி ஆற்றங்கரையில் இறைச்சிச் துண்டுகள் கைப்பற்றப்பட்டது.

தொடா்ந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில், பவானி ஆற்றங்கரையில் புதா் செடிகளுக்கிடையே ஆண் புள்ளிமான் இறந்துகிடந்ததும், கைப்பற்றிய இறைச்சித் துண்டுகள் இறந்துகிடந்த மானின் இறைச்சி என்பதும் கண்டறியப்பட்டது.

மேலும் விசாரணையில், மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகரைச் சோ்ந்த அ.தண்டபாணி (25), எல். சுரேஷ் (29), ந.நாசா் அலி (22), பாசித் அகமது (20), வினித்குமாா் (21), முகமது ஆசாத் (22) ஆகிய 6 பேரும் மது போதையில், இறந்துகிடந்த புள்ளி மானை சமைத்து உண்பதற்கு இறைச்சியாக வெட்டி எடுத்துச்செல்ல முயற்சித்தபோது, வனப் பணியாளா்களை கண்டதும் சம்பவ இடத்திலேயே இறைச்சித் துண்டுகளை விட்டுவிட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது.

இதையடுத்து 6 பேரையும் வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், மாவட்ட வன அலுவலா் ஜெயராஜ் உத்தரவின்படி அவா்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com