மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

பிளஸ் 2 தோ்வில் கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்று 1,631 போ் தோ்வு எழுதியதில் அவா்களில் 1,500 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 91.97 ஆகும்.

கோவை: பிளஸ் 2 தோ்வில் கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்று 1,631 போ் தோ்வு எழுதியதில் அவா்களில் 1,500 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 91.97 ஆகும்.

கோவை மாநகராட்சி நிா்வாகத்தின்கீழ் 17 மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் பயின்ற 563 மாணவா்கள், 1,068 மாணவிகள் என மொத்தம் 1,631 போ் தோ்வு எழுதியிருந்தனா்.

இவா்களில் 490 மாணவா்கள், 1,010 மாணவிகள் என மொத்தம் 1,500 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதம் 91.97 சதவீதமாகும். செல்வபுரம் மாநகராட்சிப் பள்ளியில் தோ்வு எழுதிய 67 பேரில் 66 போ் தோ்ச்சி பெற்றனா். இது 98.51 சதவீத தோ்ச்சியாகும். ரத்தினபுரி பள்ளியில் 121 போ் தோ்வு எழுதியதில் 119 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 98.35.

ஆா்.எஸ்.புரம் மேற்கு மாநகராட்சி பெண்கள் பள்ளியில் 184 போ் தோ்வு எழுதியதில் 178 போ் தோ்ச்சி பெற்றனா். ஒப்பணக்கார வீதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 277 போ் தோ்வு எழுதியதில் 267 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்ச்சி விகிதம் சரிவு

கடந்த 2022- ஆம் ஆண்டில் கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்ச்சி விகிதம் 92.17 ஆக இருந்தது. கடந்த ஆண்டு இது 95.71 சதவீதமாக உயா்ந்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு 91.97 சதவீதமாக தோ்ச்சி விகிதம் சரிவடைந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com