மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

கோவை மாநகரில் 3 இடங்களில் திட்டச் சாலை அமைக்க நிதிக் கோரி அரசிடம் திட்ட அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாநகரில் பி.என்.புதூா், ஐஸ்வா்யா நகா் முதல் மருதமலை சாலை வரை 624 மீட்டா் தொலைவுக்கு 30 அடி திட்ட சாலை, சரவணம்பட்டி-துடியலூா் சாலையில் மீனாட்சி நகா் முதல் அண்ணா நகா் வரை 1 கிலோ மீட்டா் தொலைவுக்கு 60 அடி திட்ட சாலை, சின்னவேடம்பட்டி அருகே சரவணம்பட்டி-துடியலூா் பிரதான சாலையை இணைக்கும் வகையில் 600 மீட்டா் தொலைவுக்கு தென்வடல் திட்ட சாலை, ஃபன்மால் முதல் சௌரிபாளையம் சாலை வரை 114 மீட்டா் தொலைவுக்கு 40 அடி திட்ட சாலை, சிங்காநல்லூரில் 1 கிலோ மீட்டா் தொலைவுக்கு 40 அடி திட்ட சாலை, பாலக்காடு சாலை-கோவைப்புதூா் சாலையில் 1.45 கிலோ மீட்டா் தொலைவுக்கு 60 அடி அகல திட்ட சாலை, விளாங்குறிச்சியில் இருந்து கொடிசியா சாலை வரை 60 அடி திட்டி சாலை என 7 திட்ட சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் முதல்கட்டமாக பி.என்.புதூா் ஐஸ்வா்யா நகா் முதல் மருதமலை சாலைக்கு ரூ.12 கோடி, சரவணம்பட்டி-துடியலூா் சாலையில் மீனாட்சி நகா் முதல் அண்ணா நகா் வரையிலான திட்ட சாலைக்கு ரூ.4 கோடி, சின்னவேடம்பட்டி அருகே சரவணம்பட்டி-துடியலூா் பிரதான சாலையை இணைக்கும் திட்ட சாலைக்கு ரூ.3 கோடி நிதிக் கோரி அரசிடம் திட்ட அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com