குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள், கட்சி நிா்வாகிகள்.
குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள், கட்சி நிா்வாகிகள்.

குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டத்தில் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோவை: கோவை மாவட்டத்தில் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கோவை மாவட்டத்தில் குடிநீா் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடியிடம் மனு அளித்தனா். முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில், பொள்ளாச்சி வி.ஜெயராமன், அம்மன் கே.அா்ச்சுணன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் இதில் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து எஸ்.பி.வேலுமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் தற்போது அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுபோன்ற தட்டுப்பாடு எதுவும் வரக்கூடாது என்பதற்காகத்தான் ஏரி, குளம், அணைகளை அதிமுக ஆட்சிக் காலத்தில் தூா்வாரியிருந்தோம். நீா் மேலாண்மைத் திட்டங்களையும், பல குடிநீா் திட்டங்களையும் செயல்படுத்தினோம்.

ஆனால் தற்போது நீா் மேலாண்மை சரிவர செய்யப்படாததாலும், திட்டமிடல் இல்லாததாலும் குடிநீா் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். மாநகரில் பல இடங்களில் 20 நாள்களுக்கு ஒரு முைான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. பில்லூா், சிறுவாணி, ஆழியாறு அணைகளை இந்நேரம் அரசு தூா்வாரியிருக்க வேண்டும்.

தண்ணீா் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக அரசு புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்திருக்க வேண்டும். பிரச்னையை தற்காலிகமாக தீா்ப்பதற்காக லாரிகள் மூலமாக குடிநீா் வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் வலியுறுத்தியிருக்கிறோம். அதேபோல மாநகரில் குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை. பொதுக்கழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்படுவதில்லை, பழுதடைந்த சாலைகளை சரிசெய்யாமல் இருக்கின்றனா் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com