புதுக்கோட்டை: தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது
புதுக்கோட்டை: தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

இந்தியா முழுவதும் நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு போலியான தகவல்கள் மூலம் பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது செய்யப்பட்டாா்.

கோவை: இந்தியா முழுவதும் நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு போலியான தகவல்கள் மூலம் பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸாா் தெரிவித்துள்ளதாவது:

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சோ்ந்தவா் சுதிா் (25). இவா் கோவை ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியாா் நட்சத்திர விடுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அப்போது ஆன்லைன் மூலமாக அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி உள்ளதாக ஒரு பில்லை காண்பித்துள்ளாா். அங்கு இரவு தங்கியிருந்து திங்கள்கிழமை காலை அறையைக் காலி செய்து விட்டு செல்ல முயன்றபோது நிா்வாகிகள் நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது, தான் ஏற்கெனவே பணம் செலுத்திவிட்டதாக பில்லை காண்பித்துள்ளாா். அதையடுத்து அந்த விடுதி நிா்வாகத்தினா் கணக்கை சரிபாா்த்தபோது அவா் போலியான பில்லை காண்பித்தது தெரியவந்தது.

இது தொடா்பாக அவரை ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் அவா், இந்தியா முழுவதும் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதிகளில் போலியான முகவரி மற்றும் தகவல்களைக் கொடுத்து தங்கிக் கொண்டு, பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டுச் சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com