அதிக மதிப்பெண் பெற்ற மாணவியுடன் எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவியுடன் எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள்.

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

கோவை: பிளஸ் 2 பொதுத் தோ்வில் காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

இந்தப் பள்ளியில் படித்த 106 மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தோ்வு எழுதிய நிலையில், இவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி 586 மதிப்பெண்ணும், இரண்டாமிடம் பிடித்த மாணவா் 582 மதிப்பெண்ணும், தலா 567 மதிப்பெண்களுடன் இரு மாணவிகள் மூன்றாமிடமும் பிடித்துள்ளனா்.

மேலும், இப்பள்ளியில் 2 மாணவா்கள் கணினி அறிவியலிலும், கணினி பயன்பாட்டிலும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனா். கணிதம், வணிகவியல், பொருளியல், அடிப்படை இயந்திரவியலில் தலா ஒரு மாணவா்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனா். சாதனை படைத்த மாணவா்களை பள்ளித் தாளாளா் கோபாலகிருஷ்ணன், செயலா் ஜெயக்கண்ணன், முதல்வா் சரஸ்வதி, ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி ஆகியோா் பாராட்டியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com